2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

தொடர்பாடல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறினாலே ஜவாத் எதிராக வாக்களித்துள்ளார்: ரவூப் ஹக்கீம்

Super User   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் எதிராக வாக்களித்தமை தொடர்பாடல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறே என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் கட்சியால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கையில்  ஜவாத் ஈடுபடாததனால் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து ஏற்கனவே  நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறின் காரணமாகவே ஜவாத்திற்கு உரிய நேரத்திற்கு கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்படவில்லை. இதனாலேயே அவர் எதிராக வாக்களித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாதை தவிர்ந்த ஏனைய அனைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்களும் உத்தேச உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூல வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .