2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழக குழப்பங்களுக்கு ஜே.வி.பி. அமைப்பே காரணம்: எஸ்.பி

Super User   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜே.வி.பி.யும் ஜே.வி.பி. சார்பான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமுமே காரணமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஜே.வி.பி. சார்பான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டத்தில் ஆதரவுகள் குன்றியே காணப்படுகின்றன.

ஓரிரு சத வீத மாணவர்களே  அந்த அமைப்புக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.  ஆனால், ஜே.வி.பி. வன்முறை மூலமாக மாணவர் சங்கங்களைக் கட்டுப்படுத்தி பல்கலைக்கழங்களில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை யாழ், கிழக்கு, தென்கிழக்கு, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களில்  ஜே.வி.பி.யின் ஆதிக்கம் இல்லாததால் அங்கு மாணவர்களின் பிரச்சினைகள் இல்லை எனவும் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X