2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

இந்தியாவிலிருந்து திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாட்டிலுள்ள முகாம்களிலிருந்து மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.நா. வின் புதிய புள்ளிவிபரவியல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 

யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் எந்த வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறாதுள்ள நிலையில்; தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் இலங்கை அகதிகளின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு தப்பி சென்ற 67 பொதுமக்களைக் கொண்ட குழுவொன்று, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை முகவர் நிலையத்தின் உதவியுடன் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

இரு நாள்களுக்கு முன்னர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள இந்த அகதிகள், இந்தியாவிலுள்ள  அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை முகவர் நிலையத்தின் உதவியை நாடியுள்ளனர்.

இந்தியாவிலுள்ள 112 முகாம்களில் 71,654 இலங்கை அகதிகளும் வெளியிடங்களில் 32,467 இலங்கை அகதிகளும் தங்கியுள்ளதாக கடந்த ஜூலை மாதம் வரையில் இந்திய அரசாங்கத்தின் புள்ளிவிபரவியல்த் தகவல்கள் தெரிவிக்கின்றன. (DM)


  Comments - 0

 • xlntgson Sunday, 24 October 2010 08:46 PM

  வரவேற்போம்!
  மீண்டும் போகும் எண்ணம் இல்லாதிருக்குமா?
  பலவருடங்கள் வாழ்ந்த ஊராயிற்றே!
  இவர்களை பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களுக்கு கை அசைத்து விட்டு திரும்புவது நல்ல அறிகுறி!
  தங்கள் சொந்த வீட்டை கட்டி எழுப்பும் ஆர்வம் இவர்களுக்கு இருக்கும்.
  பழைய நட்பு 'இரயில் பயணங்களில்' போல தான் மறந்துவிட்டு ஆகவேண்டியதை பார்க்கவேண்டும் போக வர இருப்பது மிகுந்த பிரச்சினைக்கு உள்ளாகும்.
  ஒருவேளை தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் போட்டால் போய் பார்த்து விட்டு வரலாம் நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லவற்றை மறப்பது உடன் நன்று!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--