2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஊடக மற்றும் தொடர்பாடல் பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் மாவட்ட ரீதியான ஊடக மற்றும் தொடர்பாடல் பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வும் முழுநாள் செயலமர்வொன்றும் கொழும்பு கமநல அபிவிருத்தித் திணைக்கள காரியாலயத்தில் நடைபெற்றது.

இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களிலுள்ள மாவட்ட கமநல திணைக்களத்தின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட 65 ஊடக மற்றும் தொடர்பாடல் இணைப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரவிந்தரகேரவிதார தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஊடக மற்றும் தொடர்பாடல் இணைப்பாளர்களால் ஆற்றக்கூடிய செயல்திறன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், ஊடகம் தொடர்பான சட்ட விதிமுறைகளும் விளக்கமளிக்கப்பட்டன.

ம்த்துடன், எதிர்காலத்திய் எமது நாட்டின் விவசாயத்துறை அபிவிருத்திக்கு இந்த ஊடக வலையமைப்பைக் கொண்டு அடைய வேண்டிய அடைவுகள் தொடர்பாகவும் ஆணையாளர் நாயகத்தினால் கூறப்பட்டது.

இந்த நடவடிக்கைகளுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து ஊடகத்துறை சார்ந்த இருவர் உள்ளடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .