2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

எனது மகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை: றிசானாவின் தாயார்

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுமையா றிஸ்வி)

தனது மகளின் மேன் முறையீட்டு வழக்கு விசாரணைகள் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது என றியாத்தில் தொழில் புரியும் றிசானா நபீக்கின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்ததாக றிஸானா நபீக்கின் தாய் பாத்திமா ரசீனா தெரிவித்தார்.

"றியாத்தில் தொழில் புரியும் தங்களது உறவினர்கள் நீதிமன்ற விசாரணை நாட்களில் செல்வதாகவும், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  தன்னுடன் பேசிய அவர்கள் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது"  என தெரிவித்ததாகவும் ரசீனா தெரிவித்தார்.

றியாத்தில் உதவியாளராக தொழில் புரியும் உறவினர் மூலமே தனது மகள் றிசானா தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்று வருவதாக ரசீனா குறிப்பிட்டார்.

"எனது மகளுக்கு என்ன நடக்கின்றது என்று எனக்கு தெரியாது. மக்கள் கூறுவது மாத்திரமே எனக்கு தெரியும். றிசானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டு தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றன. இனியும் யாரை நம்புவது என்று எனக்கு தெரியாது" என ரசீனா குறிப்பிட்டார்.

றிசானா நபீக் மூதுரை பிறப்பிடமாகக் கொண்டவர். குடும்பத்தின் முத்த பிள்ளையான றிசானாவுக்கு இரு சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளனர்.

 

 


  Comments - 0

  • mohamed hathee Tuesday, 09 November 2010 11:04 PM

    ரிசானா நபீகுக்கு மன்னிப்பு வழங்கவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .