Super User / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பெயர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என மாற்றப்படவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
நாட்டில் உள்ள சகல இன மக்களையும் உள்வாங்கும் நோக்கிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என பெயர் மாற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"கட்சியின் பெயர் மாற்றப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் கட்சியின் அடிமட்டம் முதல் அதியுயர் பீடம் வரை உறுப்பினர்களாக ஏனைய இன மக்களையும் எமது கட்சியில் உள்வாங்க முடியும்" என நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் கூறினார்.
கைத்தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் றிசாட் பதியுதீனை தலைவராகக் கொண்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அத்துடன் கிழக்கு மாகாண சபை, யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகியவற்றில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
23 minute ago
41 minute ago
1 hours ago
Mohamed Razmi Friday, 29 October 2010 03:44 AM
எல்லாம் மக்கள் பெயரிலேயே நடக்கின்றது. மக்கள் வாழாவிட்டாலும்! தலைவர்கள் வாழ்க!!
Reply : 0 0
nazeem Sunday, 31 October 2010 09:27 AM
இது ஒரு அரசியல் உள் நோக்கம்
கொண்டது. தங்கள் பாராளுமன்றம் போவதை மட்டும் இலக்காக கொண்டதே இதில் எந்த சமுக நோக்கமும் கிடையாது.
Reply : 0 0
raza Sunday, 31 October 2010 08:35 PM
முஸ்லிம்களை ஏமாற்றியது போக அணைத்து இன மகளையும்
எமற்றுவதட்கு ஒரு கட்சி தேவைதான் ......... சபாஷ்....
வாழ்க சுயநலம் ! வளர்க தொப்பை !
a
Reply : 0 0
xlntgson Sunday, 31 October 2010 09:21 PM
தோட்டதொழிலாளரை பிரநிதித்துவப்படுத்தும் இ தொ கா, பெயரில் இன பேதம் இல்லை. ஆனால் பெரும்பான்மைக் கட்சிகள் இந்திய வம்சவழிக் கட்சியாகவே பார்க்கின்றனர். அதில் சிங்களவர்கள் இல்லாமல் இல்லை, ஆனால் தலைமைத்துவம் வழங்கப் படுமா? அசீசுக்கு பின் முக்கியமான ஒரு முஸ்லிம் இல்லையே என்று பைசர் முஸ்தபா வந்தார். ஆனாலும் வென்றபின் அவர் நேரடியாகவே ஆளும் கட்சியில் சேர்ந்துவிட்டார். பெயர்மாற்றம் பெரும் புரட்சி எதையும் செய்யாது. இது மதமாற்றத்தின் மூலம் உலகில் பெரும் மாற்றங்கள் வந்துவிடும் என்னும் மதவாதம் போன்றது. யுத்தமயம் ஆகும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
41 minute ago
1 hours ago