Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
ஹைகோப் வழக்கின் முதலாவது சந்தேகநபரான முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவின் சார்பில் வழக்குரைஞர் அசேல றெக்காவ இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்நிலையில், "தனுனவின் சார்பில் தான் ஆஜராகப் பணிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பணிப்புரை வெளிநாட்டில் தங்கியுள்ள தனுனவினால் தனக்கு விடுக்கப்பட்டதாகவும் இருப்பினும் தனுனவின் இருப்பிடம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது" என்றும் மேற்படி வழக்குரைஞர் நீதிமன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து மன்றில் வாதிட்ட அரச தரப்பு வழக்குரைஞரான தமித் தொடவத்த, "வழக்குத் தொடருநர் இதை ஆட்சேபிக்க மாட்டாரெனவும் ஆனால், எதிர்த்தரப்பு வழக்குறைஞர் இந்த விடயத்தில் பொறுப்பேற்க வேண்டும்" எனவும் கூறினார்.
இந்நிலையில், மேல் நீதிமன்ற நீதிபதியான சுனில் ராஜபக்ஷ, பிரதிவாதி சார்பில் தோன்ற வழக்குறைஞர் அசேல றெக்காவவுக்கு அனுமதி வழங்கினார். இருப்பினும் முழு விடயத்திலும் இவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025