2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பணமோசடி செய்த பெண் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, பணமோசடியில் ஈடுபட்ட 36 வயதான பெண்ணொருவரை அநூராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெண்மணி, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி 40 பொதுமக்களிடமிருந்து 10 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை மோசடி செய்துள்ளார்.

தங்காலையைச் சேர்ந்த இப்பெண்மணி, றாகம பகுயிலிருந்து நீண்டகாலமாக இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்மணி கைதுசெய்யப்படும்போது ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள்,  32 ரூபாய் பணம் மற்றும் போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .