2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஜனாதிபதி செயலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பின் போது ஜனாதிபதி சமூகமளிப்பார்

Super User   / 2010 நவம்பர் 02 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

18ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதற் தடவையாக 2011 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செயலகத்திற்கான நிதியொதுக்கீட்டு வாக்கெடுப்பின் போது நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ளார்.

18ஆவது திருத்தச் சட்டத்திற்கிணங்க ஜனாதிபதி மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாடாளுமன்றத்திற்கு சமூகமளிப்பத் அவசியம்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என ஆளும் கட்சி பிரதம கொறடா தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அதன்பின்னர் குழுநிலை விவாதத்திலும் ஜனாதிபதி செயலக வாக்கெடுப்பின் போதும் ஜனாதிபதி நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார்.   

18ஆவது திருத்தச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற அமர்வு தினமும் காலை 9.30 முதல் பிற்பகல் 6.30 வரை இடம்பெறும். வரவு செலவுத் திட்ட இரண்டாம் கட்ட விவாதம் நவம்பர் 29ஆம் திகதி வரை இடம்பெறும். குழுக்கள் மீதான விவாதம் 10 நாட்கள் நடைபெறும்.

உத்தேச வரவு செலவுத் திட்டத்திற்கிணங்க, அரசாங்கத்தால் ஆகக் கூடுதலாக 214 பில்லியன் பாதுகாப்பு அமைச்சுக்கும் அதற்கு அடுத்த படியாக 75 பில்லியன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .