2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

புனித ஹஜ் பயண தடங்கள் நிவர்த்திக்கு அரசிடம் கோரிக்கை

Super User   / 2010 நவம்பர் 07 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா நகருக்கு தங்களை அனுப்பி வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மக்கா செல்ல முடியாமல் நேற்று மாலை முதல் கொழும்பு கலதாரி ஹோட்டலில் தங்கியிருக்கும் ஹாஜிகள் தமிழ்மிரர் இணையத்தளத்திடம் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை, தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்றன விமானத்தில் வைக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் கூறினர்.

அத்துடன், "தற்போது கஷ்டத்திற்கு மத்தியில் உள்ள  தங்களது பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க   இலங்கை ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் எவரும் இதுவரையில் வந்து சந்திக்கவில்லை" எனவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனினும், ஹோட்டல் கலதாரியில் தங்கியுள்ள ஹஜ் யாத்திரீகர்களை, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகளும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

"பயணம் தாமதிக்கும் பட்சத்தில் தங்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படலாம்" எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

ஹஜ் யாத்திரீகர்களை ஏற்றிச் செல்லும் சவூதி எயார் லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்று புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவிருந்த ஹாஜிகள் கொழும்பு கலதாரி ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை ஹஜ் கமிட்டியின் தலைவரும் மேல் மகாண ஆளுநருமான அலவி மெளலானாவுடன் தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது,

விமான எசின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாரு காரணமாகவே இப்பிரச்சினை ஏற்பட்டது எனவும் இது தொடர்பில் சவூதி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும் இன்று இரவுக்குள் இவர்கள் புனித மக்கா நகருக்கு புறப்பட்டு சென்றுவிடுவார்கள். இப்பிரச்சினைக்கு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது தறாகும் எனவும் அலவி மெளாலான குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இன்று திட்டமிடப்பட்டிருந்த புனித மக்காவுக்கான விமானம் இன்று காலை பண்டாரணாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது.

இது தொடர்பாக இலங்கை ஹஜ் குழுவின் உறுப்பினர் அஸாத் சாலியுடன் இன்று காலை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவியபோது,

இப்பிரச்சினை தொடர்பாக சவூதி எயார் லைன்ஸுடன் பேசியுள்ளதாகவும் இன்று மாலைக்குள் இவர்கள் சவூதி அரேபியா செல்வார்கள் என அவர் புனித ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக மக்கா செல்ல முன் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.(Pix By: Nishal Badhuge )  Comments - 0

  • AHM Azwar Monday, 08 November 2010 01:30 AM

    நானும் என்னவோ எதோ என்று பயந்து விட்டேன். Affter all கலதாரியில் தங்க வைத்ததுக்கு தானா இந்த ஆர்ப்பாட்டம்? ஹாஜிகளே பொறுமையும் சகிப்புத்த் தன்மையும் ஹஜ் உடைய முக்கியமான குறிக்கோள்கள் என்பதை இனியாவது உணருங்கள். அல்லாஹு உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் ஆமீன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--