Suganthini Ratnam / 2010 நவம்பர் 08 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நகரிலுள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்குள்ளும் சுமார் 1800 டோனற்ஸ் எனப்படும் உணவுப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் இவ்வாறான ஆரோக்கியமற்ற செயற்பாடுகளை தடுப்பதற்காக பாடசாலை சிற்றுண்டிச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாட்டு உணவுப் பொருள்கள் போன்ற உணவுப் பொருள்களை 3 முன்னணிப் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படுவதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
சில உணவு விடுதிகளில் சீனா, இத்தாலி மற்றும் இந்தியா ஆகிய நாட்டு உணவுப் பொருள்களுக்கு விசேடத்துவம் பெற்றவையாகும். ஆனாலும் சில பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளிலும் இவ்வாறான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறான சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் உடற்பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்துமென பிரதி சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்நிலையிலேயே, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் ஆரோக்கியமான உள்ளுர் தயாரிப்பிலான உணவுப் பொருட்களையும் பழச்சாறுகளையும் விற்பனை செய்யப்பட வேண்டுமெனக் கூறும் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். (MB) (DM)
7 minute ago
12 minute ago
36 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
36 minute ago
45 minute ago