2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கோதுமை மாவு நுகர்வுக்கு எதிரான பிரசாரங்களை முறியடிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானம்

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

கோதுமை மா பாவனைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள்  குறித்து ஆராய்வதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குழுவொன்றை நியமித்துள்ளது.

நேற்று நடைபெற்ற சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் இக்குழு நிமியக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். கோதுமை மா மூலமான உணவுப் பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீவிர பிரசாரங்களும் கோதுமை மா விலை உயர்வும் கிராமிய மற்றும் சிறுநகரப் பகுதிகளில் பாண் விற்பனையை குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'தற்போது சிலர் கோதுமை மா நுகர்வை பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிக்கின்றனர். எனவே நாம் இப்பிரசாரங்களுக்கு எதிர் பிரசாரங்களை இனங்காண வேண்டியுள்ளது. இதில் அரசாங்கத்தின் பங்களிப்பையும் பெற விரும்புகிறோம்.

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளுக்கு பாண் விநியோகம் செய்வதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காணரமாக பாண் விற்பனை குறைந்துள்ளது. பாடசாலை அதிகாரிகள் பாடசாலைக்கு வெளியில்கூட கோதுமை மா மூலமான உணவுப்பொருட்களை விற்க அனுமதிக்கிறார்கள் இல்லை' என ஜயவர்தன கூறினார்.

இதேவேளை கோதுமை மா உணவுப் பொருட்களை தடை செய்யும் கொள்கை எதனையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என உள்நாட்டு வர்த்தக அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து பேக்கரி உரிமையாளர்களின் கருத்துகளையும் செவிமடுக்க  விரும்புவதகாவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--