2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

பெண் எம்.பிக்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம்

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த ஒன்றியத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜீ.ஜெயசேனவும் பிரதி தலைவராக சந்திரானி பண்டாரவும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தின் போது  நாடாளுமன்றம் மற்றும்  உள்ளூராட்சி மன்றங்களின் பெண்களின் பிரதிநித்துவத்தை அதிகரித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல் முறை திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான 25% வீதத்தில் ஒரு வீதத்தை காட்டயம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பிலான மகஜரொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்புவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை பெண்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .