2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மு.கா. தீர்மானம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 12 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடியபோதே, தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டதாக பஷீர் சேகுதாவூத் கூறினார்.

2002ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து ஆராய்வதற்காக, 8 பேரைக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவொன்றினை ஜனாதிபதி நியமித்திருந்தார்.

ஆனால், 2002 – 2009 வரையிலான காலப் பகுதியினை விடவும், அதற்கு முற்பட்ட 1990களிலேயே முஸ்லிம்களுக்கு மிகவும் மோசமான அழிவுகள் ஏற்பட்டதாகவும், அந்தக் காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு நிகழ்ந்தவை குறித்துப் பேசமுடியாத ஆணைக்குழு முன்னிலையில், தாம் சாட்சியமளிக்கப் போவதில்லை எனவும் முஸ்லிம் காங்கிரஸ் முன்னர்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .