Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 12 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ ஜயசேகர)
தமது பாரம்பரிய மற்றும் சட்டபூர்வமாக பெற்றுக்கொண்ட காணிகளை கடந்த 30 வருடகால யுத்தத்தினால் இழந்த மக்கள், காணி அபிவிருத்தி அமைச்சினால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள 'பிம்சவிய' திட்டத்தின் மூலம் அக்காணிகளை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
"யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீளக்குடியேறுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாம் அறிவோம். மீள்குடியேற்றத் திட்டங்களை இது வெகுவாக பாதிக்கிறது. காணிகளின் சட்ட ரீதியான உரிமையாளர்களை இனங்கண்டு அவர்களின் காணி உரிமை ஆவணம் தொலைந்திருந்தால், அவர்களுக்கு 'காணி உரிமை சான்றிதழை' வழங்கியபின் அவர்களை அக்காணிகளில் குடியேற்றுவதே எமது நோக்கம்" என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மேலும் கூறினார்.
பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், காணி ஆணையாளர் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் அலுவலகம் ஆகியவற்றில் கிடைக்கக்கூடிய ஆவணங்களுக்கூடாக காணிகளின் உண்மையான உரிமையாளரை இனங்காண்பதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
10 minute ago
24 minute ago
36 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
36 minute ago
45 minute ago