Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2010 நவம்பர் 14 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கிழக்கு மாகாண கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து அவர்களின் உற்பத்திப் பொருட்களை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரபலப்படுத்தும் திட்டமொன்றினை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை முன்னெடுத்துச் செல்லவுள்ளது.
பன் வகை, பனையோலை, மற்றும் காய்ந்த ஓலை போன்ற உள்ளூர் தேசிய வளங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக மேலும் மெருகூட்டி அழகு படுத்துவதற்காக கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு பயற்சி வகுப்புகளை அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சந்தைகளில் நிலவும் கேள்விகளுக்கு ஏற்ப இலங்கையின் உற்பத்திப் பொருட்களை உயர்தரம் உள்ளதாக மாற்றுவதனால் கைத்தொழில் முயற்சியாளர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் என கிழக்கு மாகாண ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் மனோஜ் புபுலேவ தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago