2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

உணவுப் பொருட்களை அவதானத்துடன் கொள்வனவு செய்யுமாறு எச்சரிக்கை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 14 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கு காரணமாக தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதனால்,  மூலிகைச்செடிகளையும் உறையவைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் பொதுமக்கள் அவதானத்துடன் கொள்வனவு செய்யுமாறு கொழும்பு தொற்றுநோய்ப் பிரிவு எச்சரித்துள்ளது.

மழை வெள்ளத்தால் இவ்வாறான மூலிகைகள் மாசுப்படுத்தப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் இந்த மூலிகைச் செடிகளை கொள்வனவு செய்யும்போது அவதானத்துடன் இருக்கவேண்டுமென தொற்றுநோய்ப் பிரிவின்  வைத்தியர் சுகத் பீரிஸ் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அத்துடன், வெள்ளத்தினால் கடைகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் ஐஸ்கிறீம் மற்றும் கோழி இறைச்சி போன்றவற்றையும் கடையிலிருந்து பொதுமக்கள் கொள்வனவு செய்யும்போது அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் கூறினார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்களை அழிப்பதற்காகவும் மேற்பார்வை செய்வதற்காகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்கள் தலைமையில் 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேற்படி குழுவினர் கொலரா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்களெனவும் வைத்தியர் சுகத் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு மாநகரசபையின் பொதுசுகாதாரத் திணைக்களமும் நிலைமைகளை அவதானித்து வருகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--