2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பாலியல் படங்களில் தோன்றிய நால்வரிடம் பொலிஸார் விசாரணை

Super User   / 2010 நவம்பர் 16 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாலியல் படங்களில் நடித்ததாகக் கூறப்படும் 3 பெண்களிடமும் ஆணொருவரிடமும் தற்போது பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் படங்களில் தோன்றிய பலரின் புகைப்படங்களை கடந்த வாரம் பொலிஸார் வெளியிட்டதைத் தொடர்ந்து மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் படங்களில் இவர்களின் பாத்திரங்கள் குறித்து பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இதேவேளை, நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச இணையத்தளங்கள் தொடர்பாக, சிறுவர் விவகார நீதிமன்றம் மீண்டும் நவம்பர் 18 ஆம் திகதி கூடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆபாச இணையத்தளங்களுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மூலம் 800 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
(பி.டி.ஐ.)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .