Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிகவும் பலவீனமாக காணப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் உடல்நிலை தேறிவருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசூரிய அவரைச் சென்று பார்த்தபின் கூறினார்.
சில நாட்களுக்கு முன் அவர் மாறி மாறி வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஒரு நாளில் மட்டும் மூன்று வழக்குகளுக்கு அவர் சென்றார். அவர் உடல்நிலையில் இது கடுமையான வேலையாக இருந்தது என ஜயசூரிய கூறினார்.
பொன்சேகாவைக் கவனித்து வரும் வைத்தியர்கள், அவருக்கு நல்ல காற்றும், முறையான உணவும், உடற்பயிற்சியும் தேவையெனவும் கூறினர். ஆனால் சிறையில் அவருக்கு இவை மறுக்கப்பட்டுள்ளன.
இவருக்கு சிறையில் உடற்பயிற்சி இயந்திரம் வைத்திருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அவரின் உடல்நிலை பாதிப்புக்கு வழிவகுத்துள்ளது எனவும் கரு ஜயசூரிய கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
3 hours ago