2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ஜே.வி.பியின் கார்ட் போர்ட் பாண் பொலிஸாரால் தடுத்துவைப்பு

Super User   / 2010 நவம்பர் 18 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்துவதற்காக காட்போர்ட்டினால் தயாரிக்கப்பட்ட பாண் மற்றும் தேங்காய் உருவங்களை ஏற்றிச்சென்ற லொறியொன்றை பொலிஸார், இன்று மாலை பேலியகொடையில்  கைப்பற்றி தடுத்து வைத்துள்ளதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

லொறியின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

"இது ஏன் என எமக்கு விளங்கவில்லை. இப்பொலிஸாருக்கு எதிராக நாம் முறைப்பாடொன்றை செய்துள்ளோம். ஆரம்பத்தில் அவர்கள் எமது முறைப்பாட்டை பதிவு செய்யத் தயங்கினர். சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் எமது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்தனர். இறுதியில் அதை எம்மால் செய்ய முடிந்தது' என அவர் கூறினார்.

மேற்படி பொருட்களை ஜே.வி.பியினர் இன்று லிப்டன் சதுக்கத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .