Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் நேற்று திறந்துவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அடை மழை காரணமாக லக்ஸபான, விமலசுந்தர மற்றும் விக்டோரியா ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் கூறினர். விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகளும் லக்ஸபான நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அந்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
மலையத்திற்கான ரயில் சேவையானது கொழும்பிலிருந்து றம்புக்கனை மாத்திரமே இடம்பெறுமென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது. மேல்கோட்டை மற்றும் றம்புக்கனைக்கும் இடையிலான ரயில் தண்டவாளத்தில் பாரியளவிலான பாறாங்கற்கள் வீழ்ந்திருப்பதால் மலையகத்திற்கான ரயில்சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 116 மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.(DM)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago