Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
அரச வைத்தியசாலைகளில் சில மருந்துப் பொருள்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், இம்முறை வரவு, செலவுத்திட்டத்தில் இதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லையென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகளை மருத்துவர்கள் இடைநிறுத்துவதற்கான நிர்ப்பந்தத்திற்குள்ளாவதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர், வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மஹரகம வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான பல வைத்திய உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஹோமகம வைத்தியசாலையிலும் இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .