2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கான பரீட்சை ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு ஆட்களை  சேர்ப்பதற்காக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இன்று நடைபெறவிருந்த எழுத்துமூல பரீட்சை இம்மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த பரீட்சைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள பரீட்சைக்கு பயன்படுத்த முடியுமெனவும் அவர் கூறினார்.

கொழும்பிலுள்ள அசோகா வித்தியாலயத்திலும் யாழ். மத்திய கல்லூரியிலும் எதிர்வரும் 11ஆம் திகதி மேற்படி பரீட்சை நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--