2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலங்கை அரசியல் யாப்பு கடினமான சொற்களால் உருவாக்கப்பட்டுள்ளது: டி.பி.கெட்டியாராச்சி

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்தில் கொண்டுவரப்பட்ட நகல் அரசியல் யாப்பில் - உள்ளூராட்சி மன்றத்துக்கென சிறப்பான ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது கிழித்தெறியப்பட்டு விட்டது என்று உள்ளூராட்சி மாகாண அமைச்சின் மேலதிகச் செயலாளர் டி.பி.கெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஆசிய மன்றத்தின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றிய பயிற்சிப் பட்டறையொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலதிகச் செயலாளர் கெட்டியாராச்சி அங்கு மேலும் பேசியதாவதுளூ

இலங்கை அரசியல் யாப்பு கடினமான சொற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதை சாதாரணமானவர்களால் வாசித்தறிவது மிகவும் கடினமாகும். ஆனால், தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பானது அனைவரும் வாசித்தறியும் வகையில் மிகவும் இலகுவான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த யாப்பில் விளக்கப்படங்கள் கூட உள்ளடக்கப்பட்டுள்ளன. அதனால், சிறுவர்களால் கூட அதனை வாசித்தறிய முடியும்.

ஒரு பிரதேசத்தின் வீதி, திண்மக்கழிவு போன்ற விடயங்களில் உள்ளூராட்சி மன்றங்களே முற்றுமுழுதான அதிகாரமுடையவை. இந்த அதிகாரத்தோடு வேறு சிலர் அறியாமல் முரண்படுகின்றார்கள். அவ்வாறு முரண்படுகின்றவர்களுக்கெதிராக உள்ளூராட்சி மன்றத்தினர் நீதிமன்றம் செல்ல முடியும்.

சுதந்திரத்துக்குப் பின்னரான 60 வருடங்களில் உள்ளூராட்சி சட்டங்களில் பாரிய மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. அதனால், இன்று வங்கித்துறைகள் போன்றவை ஏ.ரி.எம். அட்டைகளை பயன்படுத்தும் நிலையில் உள்ளபோது, உள்ளூராட்சி மன்றங்களோ இன்னும் பாரிய புத்தகங்களிலேயே தமது பதிவுகளை மேற்கொண்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .