2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

சுனாமியின்போது காணாமல்போன குழந்தை மீட்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது, காணாமல்போனதாக நம்பப்பட்ட  6 வயதுடைய சிறுமியொருவர் வெல்லம்பிட்டியவிலுள்ள வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த சிறுமி பிறந்து இரண்டு நாள்களேயான நிலையில் காணாமல்போனதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.

காலிப் பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து, இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. தென்பகுதி வைத்தியசாலை பணியாளர் ஒருவரால் குறித்த குழந்தை மேற்படி பாதுகாவலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த குழந்தையை வளர்க்க முடியாதெனக் கூறி, தமக்கு அறிமுகமில்லாத பெண்ணொருவர் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக பாதுகாவலர்கள் தெரிவித்தனர்.

மரபணு பரிசோதனை செய்து இக்குழந்தையை பெற்றுக்கொள்வதற்காக சுனாமியின்போது காணாமல்போன பிள்ளைகளின்  பெற்றோர்கள் வருமாறு   அனோமா திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.

இச்சிறுமி தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.  

கைதுசெய்யப்பட்ட பாதுகாவலர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  (Sanath Desmond)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--