2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

'எம்.பிகளின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்'

Super User   / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதிஒதுக்கீட்டை 10 மில்லியன் ரூபாவாக அதிகரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று கோரிக்கை விடுத்தார்.

நிதியமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், "தற்போது பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்தம்  5 மில்லியன்  ரூபா ஒதுக்கப்படுகிறது. ஆனால் வடக்கு கிழக்கு பிரதேசம் யுத்தத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகை போதாமல் உள்ளது. எனவே இத்தொகையை 10 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க வேண்டும்"  என கூறினார். 

அதேவேளை, யாழ்ப்பாணத்தின் கனிய வளங்கள் சுரண்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அங்குள்ள சுண்ணாம்புக் கற்கள்  பெருமளவில் சுரண்டப்படுவதாகவும் இதனால் சுற்றாடல் பாதிப்புகளும் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--