Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
A.P.Mathan / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசின் சூழ்ச்சி காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சரத் பொன்சேகா விடுதலையாகியதும் எமது கட்சியுடன் இணைந்தே செயற்படுவார் என்பதை உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சிறிகொத்தாவில் நடைபெற்றுவரும் ஐ.தே.கட்சியின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...
அரசின் சூழ்ச்சி காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அவர் விடுதலையானதும் ஐ.தே.கட்சியுடன் இணைந்து இக்கட்சியின் ஓர் உயரிய உறுப்பினராகவே செயற்படுவார் என்பதை இத்தருணத்தில் உங்களுக்கு உறுதியுடன் தெரிவிக்கிறேன்.
விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிய சரத் பொன்சேகா, ஆளும்கட்சி தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டையும் நிச்சயம் காப்பாற்றுவார் என்று மேலும் தெரிவித்தார். (M.M)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025