2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கிரிக்கெட் சபை நிர்வாகக்குழு அங்கத்தவர்கள் இராஜினமா

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவிலிருந்து சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவும் பிரபாத் பொன்சேகாவும் இராஜினமாச் செய்துள்ளனர்.

புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இராஜினமாச் செய்யும் சம்பிரதாயத்திற்கேற்ப, எனது இராஜினமாக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளேன். கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் விரும்புகின்றவரை நியமிப்பதற்கு வழிவிடுவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி.ரத்னாயக்காவால் நியமிக்கப்பட்ட பிரபாத் பொன்சேகாவும் இராஜினமாக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.(Channaka de Silva)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--