2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

எய்ட்ஸுக்கு மருந்து

Super User   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்தொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக ஜேர்மனியிலுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

பேர்லின் நகரைச் சேர்ந்த இம்மருத்துவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த எச்.ஐ.வி. மற்றும் இரத்தப் புற்றுநோய்குள்ளான  நோயாளியுடன் பணியாற்றிவந்தனர். இந்நிலையில் இவ்விரு நோய்களையும் குணப்படுத்தும் மருந்தை தாம் கண்டுபிடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எயிட்ஸ் நோயைப் பரப்பும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான நோயாளியொருவர் குணப்படுத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
எனினும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானோருக்கான பொதுவான சிகிச்சையாக இதை பயன்படுத்துவதற்கு முன்னர் பல வருடகால வேலைகள் எஞ்சியிருக்கின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குணப்படுத்தல் என்பது பலமான ஒரு வார்த்தை. ஆனால், இது உற்சாகமூட்டுவதாகவுள்ளது. இப்பெறுபேறு நம்பிக்கையளிப்பதகாவுள்ளது என ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி   டேவிட் ஸ்காடென் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--