2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம்: பிரித்தானிய அரசாங்கம் ஆத்திரம்

Super User   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளமை குறித்து பிரித்தானிய அரசாங்கம் ஆத்திரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த சொற்பொழிவாற்றுவதற்காக இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை இவ்வார இறுதியில் மேற்கொள்ள லியாம் பொக்ஸ் தீர்மானித்துள்ளார்.

எனினும், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதன் மூலம் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு லியாம் பொக்ஸ் சவால்விடுக்கத் தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் கார்டியன் பத்திரிகையின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

லியாம் பொக்ஸின் தீர்மானத்தினால் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் கோபடைந்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்ப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான கேள்விகள் தொடர்பாக கொழும்பு அரசாங்கத்தின் மீதான அழுத்தம் தொடர வேண்டுமென பிரிட்டன் விரும்புகிறது என அவ்வட்டாரம் தெரிவித்துள்ளது.

இவ்விஜயத்தை தடுப்பதற்காக பிரித்தானிய பிரதமரிடம் முறையீடு செய்ய வேண்டுமா என்பது குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விவாதித்து வருவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .