2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கலைஞர்களின் உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்ட விதிமுறைக்கு அங்கீகாரம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதான ஊடகத்துறை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுக்களின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த யோசனையின் பிரகாரம் இலத்திரனியல் ஊடகங்களினூடாக ஒலி, ஒளிபரப்பப்படும் இசை நிகழ்வுக்கான பாடல் வரி எழுதுதல், இசையமைத்தல் மற்றும் பாடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் கலைஞர்களின் தலா ஒவ்வொரு பாடலுக்கும் வருமானம் வழங்கப்படவுள்ளது.

அந்தவகையில் வானொலியில் ஒலிபரப்பப்படும் பாடலொன்றின் பாடல் வரி, அதன் இசையமைப்பு மற்றும் பாடலைப் பாடுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக தலா 3 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பப்படும் பாடலொன்றின் பாடல் வரி, அதன் இசையமைப்பு மற்றும் பாடலைப் பாடுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக தலா 10 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். (M.M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--