Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸின் வருகையை இலங்கை அரசாங்கம் எதிர்க்கவில்லையென்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவரது விஜயத்தின்போது, தேவையான உபசரணை மற்றும் உதவிகளை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
'இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு முக்கியஸ்தர்களை தாம் வரவேற்கிறோம். லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தின் நம்பிக்கை நிதியத்தின் அழைப்பின் பேரிலேயே லியாம் பொக்ஸ் விஜயம் செய்யவிருந்ததாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் திருமதி. கதிர்காமரின் கருத்து எதனையும் பெறமுடியவில்லை. ஆனாலும், கதிர்காமர் நினைவுதின சொற்பொழிவு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரின் அலுவலகம் தெரிவித்தது.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago