2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க எம்.பிகள் வலியுறுத்தல்

Super User   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல் சம்பவங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் 30 பேரும் செனட் சபை உறுப்பினர்கள் 17 பேரும் கையெழுத்திட்டு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், போரின் கடைசி கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும்  என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


'இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அடையும் முடிவுகள் ஐ.நா.வின் ஆதரவுடனான சர்வதேச பொறிமுறையொன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என உறுதியாக நம்புகிறோம்'  செனட் சபை உறுப்பினர்கள் மேற்படி கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புடைமை அவசியம் எனக் கூறியுள்ளதுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான தோல்வியுற்ற பல முயற்சிகள் வரலாற்றில் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


இலங்கை அத்தகைய மற்றொரு தோல்வியுற்ற படியாக மாறுவதை நாம் விரும்பவில்லை. என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--