2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஐரோப்பிய நாடாளுமன்றம் எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களின் களம்: இலங்கை

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக தமிழீழவிடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு அந்நாடாளுமன்றம்  அனுமதியளிக்கிறது என இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம், மற்றும் லக்ஸம்பர்க் ஆகியற்றுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆர்யவன்ஸ இது தொடர்பாக கூறுகையில்,  கடந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக பரிமாறப்பட்ட கருத்துக்களுக்கு இலங்கை  பதிலளிப்பதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

"அவ்வேளையில் தலைமை தாங்கிய அதிகாரி, இந்த நிராகரிப்பை மேற்கொண்டதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பான உப குழு இலங்கை விவகாரத்தில் நியாயமான சமத்துவமான கலந்துரையாடலை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை, அத்துடன் எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு இந்நாடாளுமன்றம் அனுமதியளிக்கிறது என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது' என அவர் கூறியுள்ளார்.

மேற்படி மனித உரிமைகள் உபகுழுவின் தலைவி ஹெய்டி ஹெதாலாவுக்கு இலங்கைத் தூதுவர் ஆர்யவன்ஸ அனுப்பியுள்ள கடிதமொன்றில், 'டிசெம்பர் 6 ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு மணித்தியால கலந்துரையாடல் நடத்தப்பட்டது. உபகுழுவிலுள்ள 32 எம்.பிகளில் ஒருவர் மாத்திரமே பேசினார். ஐரோப்பிய ஆணைக்குழுவினால் ஒருசில கருத்துகள் தெரிவிக்கப்பட்டதைத் தவிர, பெரும்பாலான நேரம் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன' என சுட்டிக்காட்டிள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--