2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பாதி தேங்காயை கூட வாங்க முடியாதளவு விலை உயர்வு: ஜே.வி.பி.

Super User   / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொருட்களின் விலை உயர்வினால் பாதி தேங்காயைகூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என ஜே.வி.பி. விமர்சித்துள்ளது.

'2005 ஆம் ஆண்டில் 12 ரூபாவாக இருந்த தேங்காய் விலை தற்போது 60 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் முழுத் தேங்காயை வாங்குவத்றகு பதிலாக பாதித் தேங்காயைதான் வாங்குகின்றனர். சில இடங்களில் தேங்காய்ப் பூவை கிராம் கணக்கில் வாங்குகின்றனர்' -இவ்வாறு கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு, வெங்காயம், சீனி, பருப்பு என்பன 2005 ஆம் ஆண்டு இருந்ததைவிட பல மடங்கு விலை உயர்ந்துவிட்டதாகவும் அவர்கூறினார்.

கடந்த வருடம் தேங்காய் உற்பத்தி 7.7 சதவீதத்தால் குறைந்துவிட்டது. அரிசியும் அப்படியே. அரசாங்கம் உள்நாட்டு உணவு உற்பத்தி குறித்து பிரசாரம் செய்கிறது. ஆனால் தற்போது கேரளாவிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுதான் ஆசியாவின் ஆச்சர்யம். தேங்காய்களுக்கு ஓர் அமைச்சரை நியமிக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.' என விஜித ஹேரத் கூறினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம் சந்திரசேகரன், வசந்த சமரசிங்க ஆகியோரும் இச்செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--