Super User / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தரி)
2011ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து அதிக மதுபானம் மற்றும் சிகரெட் நுகர்வுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் அடிப்படையில் மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையால் நோய் ஏற்பட்டு அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோரிடம் கட்டணம் அறவிடப்படும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சலரோகம், பாரிசவாதம், இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்று நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்கள் அதிகளவிலான மது மற்றும் சிகரெட் பாவனையின் காரணமாகவே உண்டாகின்றன.
மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையை குறைக்கும் வகையிலேயே பணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டது என அவர்கள் கூறினர்.
"இலங்கையில் தொற்று நோய் அல்லாத நோய்களினால் தினமும் 350 பேர் வரை மரணமடைகின்றனர். இதில் 80 சதவீதமானோர் ஆண்களே ஆகும்.
இந்த வயதினர் குடும்பத்தின் செழிப்பான வாழ்வுக்கு பெரும்பங்காற்ற வேண்டியவர்கள். இவ்வாறு அநியாயமாக இவர்கள் இறந்துபோவதனால் பிள்ளைகள் பெற்றோரை இழக்கின்றனர் சரியான வளர்ப்பும் கவனிப்புமின்றி துன்பப்படுகின்றதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுமையாகி விடுகின்றனர்.
இலங்கையில் நாலில் ஒருவர் சலரோகம் உடையவராக உள்ளனர். மாரடைப்பால் தினமும் 40 பேர் வரை இறக்கின்றனர். தினமும் 500 இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 30000 பேர் சிறுநீரகம் தொழிற்படாமல் அவஸ்தைப்படுகிக்றனர்.
புற்று நோய் வந்தவர்களில் 30 சதவீதமானோர் மட்டுமே 5 வருடங்களுக்கு மேல் தப்பிப்பிழைக்கின்றனர்.
தொற்று நோய் வகைக்குள் உள்ளடங்காத இந்த நோய்களுக்கு ஆண்டு தோறும் அரசாங்கம் 90 பில்லியன் ரூபா செலவிடுகின்றது" என சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
14 minute ago
21 minute ago
38 minute ago
2 hours ago
xlntgson Tuesday, 21 December 2010 10:32 PM
நல்ல முடிவு போல் தோன்றினாலும் இதை யார் முடிவு செய்வர்? இதிலும் அரசியல் புகுந்து கொள்ளுமோ, சமுர்த்தி முத்திரைகள் உர மானியம் போன்று! பொதுவாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்க கூட பயப்படுகின்றனர், கோர்ட்டுக்கு அலைய வேண்டியது வரும் என்று!
மதுவை தடை செய்வதைப் பற்றி அரசு சிந்திக்கவில்லை என்றால் சிக்கல் அதிகரிக்கும். இதைப்பற்றி நான் விரிவாக கூறி இருப்பதை தேடலில் பார்க்கலாம். நோக்கின் என்னும் ஒருவருக்கு 125 ml என்று sache பக்கெட்டுகளில் கொடுக்கலாம் சலுகை விலைக்கு நான் மதுவின் ருசியும் அறியாதவன், teetotaller!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
38 minute ago
2 hours ago