Menaka Mookandi / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
பதுரலியவை சேர்ந்த 23 வயதான பெண்ணொருவர் தனது பெற்றோருடன் காலிமுக கடற்கரையில் உல்லாசமாக இருந்த வேளையில் பலமான அலையொன்றால் கடலினுள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் கரையோர பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி நீரில் மூழ்கும் தருவாயிலிருந்த வேளையில் கரையோர பாதுகாப்பு பிரிவினால் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உயிர் காப்புப் பிரிவின் வீரரான ஜீ.எல்.ஆர்.சொய்சாவழன் கண்ணில் தென்பட்டுள்ளார். உடனடியாக செயலில் இறங்கிய இவ்வீரர் குறித்த யுவதியை மரண தருவாயிலிருந்து மீட்டு நிகழவிருந்த பெரும் அனர்த்தத்தை தடுத்துள்ளார்.
இதன் பின்னர் மேற்படி யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிர் காக்கும் சேவை உருவாக்கப்பட்டதிலிருந்து மிரிஸ்ஸவில் கடமையாற்றிவரும் இந்த உயிரிக்காக்கும் படையினரால் மூன்று வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago