Super User / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க இலங்கை அரசாங்கத்தினால் போதுமானளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதை தான் உறுதிப்படுத்துவார் எனவும் அவர் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற புத்திஜீவிகளுடனான சந்திப்பொன்றில்; பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயத்தை இந்திய மத்திய அரசாங்கத்திலுள்ள பொருத்தமான நபர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.
புத்திஜீவிகள் அரசியலுக்கு வரத் தயங்குவது குறித்து விசனம் தெரிவித்த ராகுல் காந்தி, தேசிய அரசியலுக்கு புத்திஜீவிகள் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.
அதிக இளைஞர்களை களமிறக்குவதன் மூலம் இந்தியாவின் தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த தான் முயற்சிப்பதகாவும் ராகுல் காந்தி கூறினார்.
(-இந்தியன் எக்ஸ்பிரஸ்)
26 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago
1 hours ago