Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
A.P.Mathan / 2011 ஜனவரி 09 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு புதன்கிழமையின் பின்னர் உலருணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேச செயலாளர் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இன்று மாலை மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்ற அவசர கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஹிஸ்புல்லா, பொலிஸ் உத்தியோகத்தர், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் உடைமைகளை பாதுகாப்பதில் படையினர் தீவிரம் காட்டுவர் எனவும் தேவைப்படுமிடத்து படகுச் சேவைகளை படையினர் வழங்குவர் எனவும் இங்கு சமூகமளித்த கட்டளைத்தளபதி தெரிவித்தார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்சமயம் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதனால் புதன்கிழமையின் பின்னர் உலருணவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டம் நிறைவடைந்ததும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு தான் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை கண்டறிந்து கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago