Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 10 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூடுதலான சலுகைகளை பெறுவதற்காகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடனான சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிதியுயர் இரகசிய இராஜதந்திர கேபிள் தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இந்த பயங்கரவாத அமைப்பிற்கு போதிய சலுகைகளை வழங்கிய பின்னரும் மேலும் சலுகைகளை பெறவே சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து விலகியதாக புலிகள் ஜப்பானிடம் கூறினர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் இதனை ஜப்பானிய சமாதான தூதுவர் அகாஸி மற்றும் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் சிச்சிரோ ஒட்ஸ்சுகா ஆகியோரிடம் கூறினார்.
இதனை அன்ரன் பாலசிங்கம் கூறும்போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் கூடவே இருந்தார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஜப்பானின் சமாதானத் தூதுவர் அகாஸி, விடுதலைப் புலிகளை சமாதான பேச்சுக்கு திரும்புமாறும் ரோக்கியோவில் ஜுனில் நடக்கவிருந்த நன்கொடையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளும்படியும் வற்புறுத்தினார். ஆனால், பிரபாகரன் பதிலேதும் கூறாமலே இருந்துவிட்டார்.
அகாஸி மனித உரிமைகள் விடயத்திலும் பிரபாகரனுக்கு அழுத்தம் கொடுத்தார். வடக்கு, கிழக்கின் மனிதாபிமானம் மற்றும் புனர்வாழ்வுக்கான உபகுழுவிலிருந்து வெளியேறியிருந்த புலிகளை மீண்டும் சேருமாறு பிரபாகரனுக்கு கொடுத்த அழுத்தமும் பலனளிக்கவில்லை. கூட்டத்தின் முடிவில் பிரபாகரன் அகாஸிக்கே தமிழீழத்தின் வரைபட சின்னத்தை கொடுத்தார். (DM)
40 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
58 minute ago