2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த கோரிக்கை

Super User   / 2011 ஜனவரி 10 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாட் பதியுதீன் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த கால யுத்தத்தின் போது பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களென சந்தேகத்தின் பேரில்இ கைது செய்யப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள்இதம்மிடம் இவர்களது விடுதலை குறித்து நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுள்ளதாக அமைச்சர்றிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் இதுவரைக்கும் விசாரணைகள்  நடத்தப்படாமல்இ இருக்கும் நபர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலைக்கு உதவி செய்யுமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன்இ அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் வேண்டியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X