Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 11 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல புகையிரதப் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ரயில் சேவையை சீராக மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
கல்லோயா – திருகோணமலை, கல்லோயா – மட்டக்களப்பு, மாத்தளை – கண்டி போன்ற புகையிரதப் பாதைகளை இவ்வாறு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன என்றும் அத்திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
100 வருடங்களின் பின் இவ்வாறான கடும் மழை மட்டக்களப்பு பகுதியில் இரண்டு நாட்களில் பெய்துள்ளது. இதனால் மட்டக்களப்பு புகையிரத பாதையின் சில இடங்களில் 30 அங்குலம் நீரில் மூழ்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
ரயில் பாதைகளை மீண்டும் எப்போது பயன்படுத்தலாம் என்பதை இப்போது கூற முடியாது எனவும் வேறு சில இடங்களில் புகையிரத பாதை மீது மண்கும்பிகள், மரங்கள் விழுந்துள்ளமையால் அவை தற்காலிகமாக பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல புகையிரத சேவைகள் தடைப்பட்டிருப்பதால் ரயில்வே திணைக்களத்துக்கு பெருமளவு நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க மேலும் தெரிவித்தார்.
14 minute ago
25 minute ago
48 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
48 minute ago
55 minute ago