2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

நாடு முழுவதும் குளிரான காலநிலை

Super User   / 2011 ஜனவரி 11 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

இலங்கையின் பெரும்பாலான பாகங்கள் வழமையைவிட குளிரான காலநிலை நிலவுவதாகவும் இதற்கு இந்தியாவில் வீசும் குளிர் அலையொன்று மறைமுக காரணமாக இருக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

"இலங்கைத் தீவு மேகங்களால் மூடப்பட்டுள்ளமையே குளிரான காலநிலைக்கு பிரதான காரணமாகும். அத்துடன் இந்தியாவின் குளிர் அலையும் இதற்கு மறைமுக காரணமாக இருக்கலாம் "என வளிமண்டவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்  எஸ்.எச். காரியவசம் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று காலை வெப்பநிலை 14 பாகை செல்சியஸாக இருந்தது. கொழும்பில் 24.8 பாகை செல்சியஸாகவும் இருந்தது. வழக்கமாக அதிக வெப்பநிலை நிலவும் யாழ்ப்பாணம் அநுராதபும் போன்ற பகுதிகளில் இன்று வெப்பநிலை முறையே  25.8 மற்றும் 24.4 பாகை செல்சியஸாக இருந்தது.  மன்னாரில் வெப்பநிலை 20 பாகையாகவும் கண்டியில் 20.9 பாகை செல்சியஸாகவும் இருந்தது.

இதேவேளை இந்தியாவில் குளிரான காலநிலை எதிர்வரும் நாட்களிலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்ததாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு கர்நாடகா மாநிலத்தில் சில இடங்களில் 11 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 21 பாகை வெப்பநிலை நிலவுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X