2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியா தயார்:அசோக் கே.காந்தா

A.P.Mathan   / 2011 ஜனவரி 11 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குமாகாண மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறுகையில்:

கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இந்தியா முன்வர வேண்டுமென்ற வேண்டுகோளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமத்திரன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் இலங்கைக்கான இந்திய தூதுவரை இன்று சந்தித்தனர். இச்சந்திப்பில் நிலைமைகளை கேட்டறிந்த இலங்கைக்கான இந்திய தூதுவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளையும் மருத்துவ உதவிகளையும் விரைவில் ஏற்படுத்தி தருவதற்கு இந்திய நடவடிக்கை எடுக்குமென உறுதியளித்துள்ளார்.

மிக விரைவில் இந்த நிவாரண பொருட்கள் கிழக்கில் விநியோகிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--