2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஒரே அணியாக போட்டியிடுவது குறித்து த.தே.கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் பேச்சு

Super User   / 2011 ஜனவரி 12 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒரே அணியாக போட்டியிடுவது குறித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிய வருகிறது.

இது தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த 11 ஆம் திகதி த.தே.கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கும் புளொட் தலைவர் சித்தார்த்தனுக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.

அதன்பின் 11 ஆம் திகதி நடைபெற்ற மற்றொரு கலந்துரையாடலொன்றில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், இராகவன் முதலானோர் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நேற்று  புதன்கிழமை மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தன்னுடன் கலந்துரையாடல் நடத்தியதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர்நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் தமிழ் மிரர் இணையத்தளம் கேட்டபோது, கலந்துரையாடல்கள் முடிவடைந்த பின்னர்தான் அது குறித்து கூற முடியும் என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X