2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நியமன பத்திர தாக்கல் திகதியை நீடிக்க எழுத்து மூலம் கோரவில்லை: தேர்தல் திணைக்களம்

Super User   / 2011 ஜனவரி 13 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக அங்கு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் காலப்பகுதியை நீடிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை என தேர்தல் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளருக்கு கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் காலப்பகுதியை நீடிப்பது பற்றி சிலர் பேசினார்கள். எனினும், எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தால் மாத்திரமே இது பற்றி ஆராய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக அங்கு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் காலப்பகுதியை நீடிக்குமாறு தேர்தல் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .