Suganthini Ratnam / 2011 ஜனவரி 13 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)
தற்போது வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரழிவு 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்கு அடுத்ததான இரண்டாவது மிகப்பெரிய பேரழிவாகும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் 13 நாட்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் 138 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. எனினும் கடந்த வருடம் முழுவதும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 294 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கு மேலதிகமாக இன்று வியாழக்கிழமை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 75 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் நாளை வெள்ளிக்கிழமை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதுடன் எட்டு பேர் காணமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். PIx by :- Kushan Pathiraja

3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago