2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

அமைச்சர் அதாவுல்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Super User   / 2011 ஜனவரி 13 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை நாடாளுமன்ற செயலாளரிடம் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க இன்று வியாழக்கிழமை கையளித்துள்ளார்.

தேர்தலுக்காக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் அதாவுல்லா தெரிவித்துவிட்டு சில உள்ளூராட்சி மன்றங்களை கலைத்தமைக்கு எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இநத நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரிய, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.


  Comments - 0

 • sanoos Friday, 14 January 2011 12:34 AM

  வெல் டன்

  Reply : 0       0

  xlntgson Friday, 14 January 2011 09:15 PM

  ஊருக்கு இளைத்தான் பிள்ளையார் கோயில் ஆண்டியா?
  (அமைச்சர் முடிவெடுக்கிறாரா, அமைச்சரவை முடிவு எடுக்கிறதா?)

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--