2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மு.கா அதியுயர் பீட உறுப்பினராக மாகாண சபை உறுப்பினர் மஜீட் மீண்டும் நியமனம்

Super User   / 2011 ஜனவரி 18 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.மஜீட் அதியுயர் பீடத்திற்கு மீண்டும் உள் வாங்காப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

நேற்று இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் அதியுயர் பீடம் மற்றும் அரசியல் பீடம் ஆகியன இணைந்த கூட்டத்தின் போதே ஏ.எம்.மஜீட் அதியுயர் பீட உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.மஜீட் கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்ட காலத்தில் கட்சிக்கு விரோதமாக செயற்படாமலும் கிழக்கு மாகாண சபையில் உள்ளூராட்சி திருத்த சட்டமூல வாக்களிப்பின் போது நடுநிலைமையாக செயற்பட்டமை என்பன காரணமாகவே இவர் மீண்டும் அதியுயர் பீட உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் தொடர்ந்து இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.மஜீட் மற்றும் ஜவாத் ஆகியோரை விசாரிப்பதற்காக நியமிக்கபட்ட ஒழுக்காற்றுக் குழு ஒரு தடவையேனும் கூடி இவர்கள் இருவரையும் விசாரிக்கவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையிலேயே, மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.மஜீட் அதியுயர் பீடத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.மஜீட் மற்றும் ஜவாத் ஆகியோர் செயற்படாமையால் 2010 ஏப்ரல் 8ஆம் திகதி கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டனர்.


  Comments - 0

 • junaideem Tuesday, 18 January 2011 08:39 PM

  உசார் உசார் பொது மக்களே உசார் அரசியல் வியாபாரிகள் உங்களை விற்பதற்கு தயாராகிறார்கள் ,
  பொத்துவில் மக்களே உசார்

  Reply : 0       0

  firas Wednesday, 19 January 2011 12:20 AM

  சிலருக்கு நல்லது நடப்பது பிடிக்காதது போல்!
  எம்.எ.மஜீத் அதியுயர் பீடத்துக்கு உள்வங்கப்பட்டமை பொத்துவில் மக்களுக்கு பெருமை என்றே சொல்ல முடியும்!

  Reply : 0       0

  naushard Wednesday, 19 January 2011 10:24 PM

  மஜீத் போன்றோரால் சமூகம் எதனை அடைந்தது?? ஸ்ரீ ல மு கா சமுதாய தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும். நமது உரிமை மற்றும் நமது பொறுப்பக்களை அறிந்த சமூக சேவை மனப்பாதங்குள்ள தலைவர்கள் தெரிவாக வேன்டும்.

  Reply : 0       0

  MOHAMED. Wednesday, 23 February 2011 01:27 AM

  @ firas , சப் மஜீத் பற்றி மறைந்த தலைவர் mhm அஷ்ராப் இற்கு தெரிந்ததைவிட உங்களுக்கு என்ன தெரியும்.இவர் உங்களுக்கு மாமாவா மச்சானா? 1989 ஆம் ஆண்டு இவர் செய்த துரோகம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் அநியாயம்.. 1994 இல் அதுபோலவே 2000 ஆம் ஆண்டு.......2004 ஆம் ஆண்டு இவர் கடல் நண்டு போல கரைக்கு வருவதும் பயந்து ஓடுவதுமாக சாக்கடை அரசியல் செய்தார்....பொத்துவில் மக்களுக்கு எது சரி எது பிழை என்பது நன்றாகவே தெரியும்......நீர் ஒன்றும் எமது தலைவரை விட அதிகப்பிரசங்கித்தனம் பண்ணாதே...

  Reply : 0       0

  firas Thursday, 20 January 2011 08:01 PM

  ஏன் எம்.எ.மஜீத்துக்கு சமுதாயத்தின் பொறுப்பு தெரியாமல் தானோ கிழக்கு மாகாணத்துக்கு பாதுகாப்பு போருப்பதிகரியாக இருந்தார். அரசில் லாபம் ஒன்றும் பெறாமல் சமுதாயதிக்கு வேலை செய்யும் ஒரு நல்ல மனிதர். முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை நன்று அறிந்த அரசியல்வாடி. இவரை விட வேறு யாரும் இருக்க முடியாது. வேறு எந்த அரிசியல் வாதியால் சமூகம் என்ன அடைந்தது. சிந்தியுங்கள் நவ்ஷாத் அவர்களே. வாய் இருக்கு என்று உங்கள் அர்த்தமில்லாத கருத்துக்களை எழுதவேண்டாம்.

  Reply : 0       0

  firas Thursday, 20 January 2011 08:16 PM

  நவ்ஷார்ட் அவர்களே, சமூக பற்று உடைய முப்பத்தி ஐந்தாயிரம் மக்கள் மஜீடுக்கு வாக்களித்து அவரை கிழக்கு மாகாணசபைக்கு ஒரு உறுப்பினராக தேர்ந்து எடுத்தனர். ஸ்ரீ. மு.கா. பழமை வாய்ந்த பல உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டும் மஜீத் அவர்கள் இரண்டாம் இடத்தை வென்றது மக்களின் வாக்குகளால் தெரியுமா பிரதர்.

  Reply : 0       0

  firas Wednesday, 14 September 2011 03:01 PM

  ஒரு நல்ல மனிதனைபற்றி சொல்வதற்கு மாமன் ஆகணுமா மச்சான் ஆகணுமா? தலைவர் யுளாசயக க்கு எல்லாம் தெரியும் என்று சொல்கிறீர்களே அவருக்கு தெரியாத விடயங்களும் இருக்கிறது தெரியுமா? சாக்கடை அரசியல் இவர் ஒரு போதும் செய்யவில்லை. அவர் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பதரியாக இருந்த காலத்தில் கட்சி பேதம் இன்று எல்லோருக்கும் சேவை செய்தவர். பயந்து ஓடும் சுபாவம் இவரிடம் ஒரு போதும் இருந்ததில்லை இருக்க போவதும் இல்லை.

  Reply : 0       0

  firas Wednesday, 14 September 2011 03:21 PM

  அதாஉல்லா இப்போது எங்கே? ரிசார்ட் எங்கே? நிஜாமுதீன் எங்கே? மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் எந்த கட்சியில் இருந்தார்? நஜீப் மஜீத் எங்கே? Y.L.S.Hameed எங்கே? Ferial Ahsraf எங்கே (சிங்கப்பூரில்)? பொத்துவில் அசீஸ் எங்கே? ஹிஸ்புல்லாஹ் எங்கே? பாயிஸ் எங்கே? இவர்களைத்தான் நீங்கள் எல்லாம் பழைய போராளிகள் என்று சொல்லுவீங்க . ஐயோ, ஐயோ,ஐயோ .....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--