2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இலங்கை அணி வீரர்களை பணயக் கைதிகளாக்குவதற்கு திட்டமிட்ட தீவிரவாதிகள்

Super User   / 2011 ஜனவரி 21 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானில் வைத்து இலங்கைக் கிரிக்கெட் அணி வீரர்களை கடத்திச் சென்று அவர்களை விடுவிக்க வேண்டுமானால் கைது செய்யப்பட்டுள்ள தமது அங்கத்தவர்கள் சிலரை விடுவிக்க வேண்டும் எனக் கோருவதற்கு லக்ஷர் ஈ ஜாங்வி எனும் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள அப்துல் வாஹிப் அல்லது ஒமர் என்பவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணியினருக்கு எதிரான இத்திட்டம் பாகிஸ்தானின் வஸிரிஸ்தான் பகுதியில் திட்டமிடப்பட்டதாகவும் ஜியோ  நியூஸிடம் அப்துல் வாஹிப் கூறியுள்ளர்.

'வஸிரிஸ்தானில் இத்தாக்குதல் திட்டமிடப்பட்டது. நாம் 12 பேர் இந்நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டோம்.  நான் லக்ஷர் ஈ ஜாங்வி அஜ்மட் பாருக் குழுவை சேர்ந்தவன்' என அவர் தெரிவித்துள்ளார்.

லாகூர்  சுதந்திர சுற்றுவட்டத்திற்கருகில் இடம்பெற்ற தாக்குதலின் நோக்கம் இலங்கை கிரிக்கெட் வீரர்களை பணயக் கைதிகளாக்குவதே எனவும் அவர்கூறியுள்ளார்.
 
இலங்கை அணியினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், இத்தாக்குதலுக்காக கொள்வனவு செய்யப்பட்ட ரிக்ஷாக்கள் மற்றும் முச்சக்கர வாகனங்களில்  தமது குழுவினர்அங்கு வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி தாக்குதலில் 5 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 6 பேர் மற்றும் வான் சாரதியொருவர் உயிரிழந்தனர்.

இலங்கை அணி வீரர்கள் பயணம் செய்த பஸ் சாரதி சமயோசிதமாக செயற்பட்டு பஸ்ஸை  லாகூர் கிரிக்கெட் அரங்கிற்கு கொண்டு சென்றதால் வீரர்கள் பாரிய ஆபத்தின்றி தப்பியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--